குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை தொடங்கும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. கலக்கத்தில் விமான நிறுவனங்கள்

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை தொடங்கும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. கலக்கத்தில் விமான நிறுவனங்கள்

அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்த விமான கட்டண விமான சேவை நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தெரிவித்தார்.

இந்தியாவின் வாரன் பபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். அண்மையில் புளூம்பெர்க் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் 61 வயதான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா கூறியதாவது: அடுத்த 4 ஆண்டுகளில் 70 விமானங்களுடன் விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை தொடங்கும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. கலக்கத்தில் விமான நிறுவனங்கள்
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

இந்த வர்த்தகத்தில் சுமார் ரூ.220 கோடி முதலீடு செய்ய ஆலோசனை செய்து வருகிறேன். விமான சேவை நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளை என் வசம் வைத்திருப்பேன். அடுத்த 15 தினங்களில் நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் பெறுவேன் என்று எதிர்பார்க்கிறேன். தொடங்க உள்ள மிகக் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் அகாசா ஏர் என்று அழைக்கப்படும்.

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை தொடங்கும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. கலக்கத்தில் விமான நிறுவனங்கள்
விமானம்

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் மூத்த நிர்வாகி அடங்கிய குழு நிறுவனத்தில் இருக்கும். குறைந்தபட்சம் 180 பயணிகள் அமர்ந்து செல்லக்கூடிய விமானங்களை தேடி வருகிறேன். தேவை அடிப்படையில் இந்தியாவின் விமான துறை மீது நான் மிகவும் நேர்மறையாக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகேஷ் ஜூன்ஜூன்வாலா குறைந்த கட்டண விமான சேவையை தொடங்க இருப்பது பல விமான சேவை நிறுவனங்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்.