ஹெலிகாப்டர் ஊழல் குறித்து ராகுல் காந்தி அமைதியாக இருப்பது ஏன்?.. பா.ஜ.க. கேள்வி

 

ஹெலிகாப்டர் ஊழல் குறித்து ராகுல் காந்தி அமைதியாக இருப்பது ஏன்?.. பா.ஜ.க. கேள்வி

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் குறித்து ராகுல் காந்தி அமைதியாக இருப்பது ஏன் என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில், 2010ம் ஆண்டில் இத்தாலி நாட்டை சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது வெளியே தெரிந்தது. இந்திய விமான படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட பல முக்கிய தலைகள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் ஊழல் குறித்து ராகுல் காந்தி அமைதியாக இருப்பது ஏன்?.. பா.ஜ.க. கேள்வி
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்

இந்த சூழ்நிலையில், அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களில் ஒருவரான ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாறி, இந்த ஊழலில் 2 காங்கிரஸ் தலைவர்களுக்கும், அவரது மகன் மற்றும் மருமகனும் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தை தற்போது பா.ஜ.க.கையில் எடுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஊழலில் தொடர்புடைய பெயர்கள் குறித்து தெளிவுப்படுத்தும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் ரவி சங்கர் பிரசாத் கேட்டார்.

ஹெலிகாப்டர் ஊழல் குறித்து ராகுல் காந்தி அமைதியாக இருப்பது ஏன்?.. பா.ஜ.க. கேள்வி
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

ஆனால் அங்கு அமைதி மட்டுமே உள்ளது. இந்த அமைதியை நாம் என்னவென்று புரிந்து கொள்வது. ஒவ்வொரு பிரச்சினை குறித்து டிவிட் செய்யும் நபர், இத்தாலியிலும், இந்தியாவிலும் விசாரணை நடந்து கொண்டிருக்கும் இந்த மோசடி குறித்து எதுவும் சொல்லவில்லை. என்ன காரணம். காங்கிரஸ் ஈடுபட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஏன் ஊழல் உள்ளது. அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி ஏன் மவுனமாக இருக்கிறார்? 2013 மார்ச் 25ம் தேதியன்று ஏ.கே.அந்தோணி ஊடகங்களிடம் பேசும் போது ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது மற்றம் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்று ஒப்புக்கொண்டார். மேலும் சி.பி.ஐ. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது என்பதையும் அந்தோணி கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.