இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு கதவுகள் திறந்திருக்கும்.. சச்சின் பைலட்டுக்கு நூல் விடும் பா.ஜ.க.

 

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு கதவுகள் திறந்திருக்கும்.. சச்சின் பைலட்டுக்கு நூல் விடும் பா.ஜ.க.

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்திருக்கும் என்று காங்கிரசின் சச்சின் பைலட்டுக்கு பா.ஜ.க. மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காங்கிரஸ் மேலிடம் சச்சின் பைலட்டை சமாதானம் செய்தது. மேலும், காங்கிரஸ் தலைமையும் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக சச்சின் பைலட்டிடம் உறுதிமொழி கொடுத்தது. ஆனால் இதுவரை சச்சின் பைலட்டுக்கு கொடுத்த உறுதிமொழியை காங்கிரஸ் தலைமை நிறைவேற்றவில்லை.

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு கதவுகள் திறந்திருக்கும்.. சச்சின் பைலட்டுக்கு நூல் விடும் பா.ஜ.க.
சச்சின் பைலட், அசோக் கெலாட்

அண்மையில் சச்சின் பைலட் பேட்டி ஒன்றில் இதனை கட்சிக்கு தலைமைக்கு மறைமுகமாக நினைவுப்படுத்தினார். இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேச காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அந்த கட்சியின் பொதுச் செயலாளருமான ஜிதின் பிரசாதா கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால் ஷாக்கான காங்கிரஸ், சச்சின் பைலட்டும் பா.ஜ.க.வுக்கு சென்று விட கூடாது என்று பயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சச்சின் பைலட் பொறுமையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சச்சின் பைலட் டெல்லி சென்றார். அவர் ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மாக்கன் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்.

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு கதவுகள் திறந்திருக்கும்.. சச்சின் பைலட்டுக்கு நூல் விடும் பா.ஜ.க.
ராஜ்யவர்தன் ரத்தோர்

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் காங்கிரசுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் குறித்து பா.ஜ.க.வின் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறுகையில், இந்தியா முன்னுரிமை கொடுப்பவர்கள் மற்றும் இந்தியா முதலில் என்று சொல்லும் சித்தாந்தத்துக்கு மாறுபவர்களுக்கு பா.ஜ.க.வின் கதவுகள் திறந்திருக்கும். கட்சியின் மேலிடத்தில் பலவீனமான தலைமை இருக்கும்போது, பிராந்திய தலைவர்கள் அவர்கள் விருப்பப்படி செய்கிறார்கள், நீங்கள் அனுப்பும் செய்திகளை பொருட்படுத்தாமல், அது ராஜஸ்தானிலோ அல்லது பஞ்சாபிலோ இருக்கலாம். தொலைநோக்கு இல்லாமல், தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி ஒரு பார்வையுடன் மற்றொரு கட்சியில் சேருவார்கள் என்று தெரிவித்தார்.