அவையில் எதிர்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு!

 

அவையில் எதிர்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு!

மத்திய அரசின் மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் நேற்று மீண்டும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், அவைத்தலைவர் இருக்கைக்கு அருகே வந்து, முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை கிழித்தெறிந்தனர். இதனிடையே 2 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டதையடுத்து, அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

அவையில் எதிர்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு!

இதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் கூடிய அவையில், எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட 8 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என வெங்கையா நாயுடு அறிவித்தால், எதிர்க்கட்சிகள் மீண்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், மாநிலங்களவை காலை 10.36 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.