கரு கலைப்புக்கான கால அவகாசம் உயர்வு… எத்தனை நாட்கள்னு தெரிஞ்சுகோங்க!

 

கரு கலைப்புக்கான கால அவகாசம் உயர்வு… எத்தனை நாட்கள்னு தெரிஞ்சுகோங்க!

பாலியல் குற்றங்கள் அதிகமாக நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால் பெண்களும், சிறுமிகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தேவையற்ற கர்ப்பம் உண்டாகிறது. அப்படியான கர்ப்பத்தைத் தடுக்க கரு கலைப்பு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. அவ்வாறு கரு கலைப்பு செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால் குறிப்பிட்ட கால அளவுக்குள் அதனைச் செய்ய வேண்டுமெ என்ற கேட்டையும் போடுகிறது.

கரு கலைப்புக்கான கால அவகாசம் உயர்வு… எத்தனை நாட்கள்னு தெரிஞ்சுகோங்க!

அதாவது கரு உருவான 20 வார காலத்திற்குள் (140 நாட்கள்) கலைக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு கலைத்தால் அது சட்டவிரோதம் என்கிறது அரசியலமைப்பு சட்டம். இதன் காரணமாகக் குறிப்பிட்ட காலம் கடந்த பின் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பத்தைச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். இது உடலளவிலும் மனதளவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதேபோன்று இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. திருமணமான பெண்கள் முறையாக கருத்தரித்திருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் பரிசோதனையில் சிசுவுக்கோ தாய்க்கோ ஆபத்து என்றால் கரு கலைப்பு செய்ய முடிவதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து பெண்ணிய அமைப்புகள், மருத்துவர்கள் கரு கலைப்பு காலத்தை நீட்டிக்குமாறு வலியுறுத்திவந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு கடந்த வருடம் இதற்கான சட்ட வரைவை வெளியிட்டு வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டுவந்தது.

கரு கலைப்புக்கான கால அவகாசம் உயர்வு… எத்தனை நாட்கள்னு தெரிஞ்சுகோங்க!

கரு கலைப்பு காலத்தை 20 வாரத்தை 24 வாரமாக (168 நாட்கள்) மாற்ற முடிவுசெய்தது. அதன்பின் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் மசோதா நிறைவேறியது. இச்சூழலில் தற்போது மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியிருக்கிறது. இங்கேயும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆராய்ச்சிக்கு மசோதாவை அனுப்ப எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேறியது. இதன்பின் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும்.