நடிகை ஜெயப்பிரதாவின் அரசியல் குருவும், எம்.பி.யுமான அமர் சிங் காலமானார்… பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்

 

நடிகை ஜெயப்பிரதாவின் அரசியல் குருவும், எம்.பி.யுமான அமர் சிங் காலமானார்… பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்

மாநிலங்களவை எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான அமர் சிங் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 64 வயதான அமர் சிங் கிட்னி தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார். அவர் தனது மனைவி பங்கஜா மற்றும் 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அமர் சிங்கின் மரணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் மவுனத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா தனது அரசியல் குருவென அமர் சிங்கை குறிப்பிடுவார்.

நடிகை ஜெயப்பிரதாவின் அரசியல் குருவும், எம்.பி.யுமான அமர் சிங் காலமானார்… பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்

அமர்சிங் இறப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பு தனது டிவிட்டரில் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர் திலக்கு நினைவஞ்சலி மற்றும் மக்களுக்கு பக்ரீத் பண்டிக்கைக்கு வாழ்த்துகள் தெரிவித்து இருந்தார். அமர் சிங் தனது டிவிட்டரில், சிறந்த புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர் லோக்மண்யா #பால்கங்காதர் திலக் ஜிக்கு அவரது நினைவு தினத்தில் அஞ்சலி. அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவில் இருக்கும் என பதிவு செய்து இருந்தார். அமர் சிங் நல்ல நகைச்சுவையான மனிதர். அதற்கு உதாரணமாக கடந்த மார்ச் மாதம் நடந்த சம்பவத்தை கூறலாம்.

நடிகை ஜெயப்பிரதாவின் அரசியல் குருவும், எம்.பி.யுமான அமர் சிங் காலமானார்… பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்

கடந்த மார்ச் மாதத்தில் அமர் சிங் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. வதந்தி வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் அமர் சிங் தனது டிவிட்டரில் புலி இன்னும் உயிருடன் இருக்கிறது என பதிவு செய்து இருந்தார். அமர்சிங் மறைவுக்கு, ராஜ்நாத் சிங், சுப்பிரமணயன்சுவாமி, ஜெய்ராம் ரமேஷ், நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சுப்பிரமணியன்சுவாமி டிவிட்டரில், அமர் சிங் எம்.பி. நீண்ட காலமாக நான் அறிந்த நபர் இன்று காலமானார். அவர் பெரும்பாலும் சமாஜ்வாடி கட்சிய இருந்தபோதிலும், அவர் அனைத்து அரசியல் கட்சிகள் முழுவதம் நண்பர்களை உருவாக்கினார். அவரது குடும்பத்துக்கு இரங்கல் என பதிவு செய்து இருந்தார்.