எம்.பி.க்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் மரபுகள் கடைப்பிடிக்க வேண்டும்.. ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

எம்.பி.க்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் மரபுகள் கடைப்பிடிக்க வேண்டும்.. ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எம்.பி.க்கள் விரும்பியதை தெரிவிக்கலாம். ஆனால் ஆரோக்கியமான மரபுகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. முன்னதாக மக்களவை, சபை ஒத்திவைப்புக்கு பிறகு மீண்டும் கூடியது. அப்போது மத்திய அமைச்சரும், அவையின் துணை தலைவருமான ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியதற்காக நன்றி தெரிவிக்கப்படும்.

எம்.பி.க்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் மரபுகள் கடைப்பிடிக்க வேண்டும்.. ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
ராஜ்நாத் சிங்

இந்த ஆரோக்கியமான மரபுகள் தொடர வேண்டும். இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகத்தை கொண்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இதற்கு பங்களிக்க விரும்புகிறார்கள். மாநிலங்களவையில் குடியரது தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் முடிந்து விட்டது. பிரதமர் மோடியும் அந்த தீர்மானத்தின் மீது பதில் அளித்து விட்டார்.

எம்.பி.க்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் மரபுகள் கடைப்பிடிக்க வேண்டும்.. ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
மக்களவை (கோப்புப்படம்)

உறுப்பினர்கள் தங்களுக்கு வேண்டியதை சொல்லலாம். மேலும் வேளாண் சட்டங்கள் குறித்து தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். ஆரோக்கியமான மரபுகள் பேணப்பட வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒரு விவாதத்தை தொடங்கவும், நன்றி தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளவும் நான் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.