‘அத்துமீறுவது சீனா தான்’ ஒப்பந்தத்தை மீறி எல்லைத் தாண்டக்கூடாது: ராஜ்நாத் சிங் காட்டம்!

 

‘அத்துமீறுவது சீனா தான்’ ஒப்பந்தத்தை மீறி எல்லைத் தாண்டக்கூடாது: ராஜ்நாத் சிங் காட்டம்!

சீன பாதுகாப்பு அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சீனா தான் அத்துமீறுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம், சீனப்படையை விரட்டி அடித்ததாகவும் கூறப்பட்டது. இந்த தாக்குதலால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுவதால், ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘அத்துமீறுவது சீனா தான்’ ஒப்பந்தத்தை மீறி எல்லைத் தாண்டக்கூடாது: ராஜ்நாத் சிங் காட்டம்!

இதனைத்தொடர்ந்து கடந்த 29 மற்றும் 30 ஆம் தேதி சீன ராணுவம் மீண்டும், பாங்காக் ஏரி பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த எல்லை பிரச்னைகு ஒரு முடிவுகட்ட மீண்டும் சீனாவுடன் நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லையாம். இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன பாதுகாப்பு அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய விவரங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘அத்துமீறுவது சீனா தான்’ ஒப்பந்தத்தை மீறி எல்லைத் தாண்டக்கூடாது: ராஜ்நாத் சிங் காட்டம்!

அதில், படைக்குவிப்பு போன்ற சீனாவின் ஒருதலை பட்சமான நடவடிக்கை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக இருப்பதாகவும் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் சீன படைகளை குவிக்க கூடாது என்றும் இந்திய எல்லையில் இறையாண்மை உறுதியுடன் காக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், எல்லை நிர்வாகத்தில் இந்திய படை எப்போதுமே மிகவும் பொறுப்பான அணுகுமுறையுடன் இருப்பதாகவும் சீனா தான் அத்துமீறுவதாகவும் கட்டமாக தெரிவித்த அவர், ராணுவ மற்றும் ராஜதந்திர முறையிலான பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.