மோடியை சாய்வாலா என கிண்டல் செய்தவர்கள் இன்று தேயிலை தோட்டத்தில் இலை பறிக்கிறார்கள்.. ராஜ்நாத் சிங்

மோடியை சாய்வாலா என கிண்டல் செய்தவர்கள் இன்று தேயிலை தோட்டத்தில் இலை பறிக்கிறார்கள்.. ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடியை முன்பு சாய்வால என கிண்டல் செய்தவர்கள் இன்று தேயிலை தோட்டத்தில் தேயிலை இலையை பறித்து கொண்டு இருக்கிறார்கள் என காங்கிரஸை மறைமுகமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்கினார்

அசாமில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அசாமின் ஹோஜாய் மாவட்டத்தின் லும்டிங்கில் பா.ஜ.க. சார்பில் நடந்த ஒரு பேரணியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: முன்பு நமது பிரதமரை சாய்வாலா என்று அழைத்து கேலி செய்யப்பட்டார். அன்று கேலி செய்தவர்கள் இன்று தேயிலை விற்றும், தேயிலை இலையை பறித்தும் வருகின்றனர்.

மோடியை சாய்வாலா என கிண்டல் செய்தவர்கள் இன்று தேயிலை தோட்டத்தில் இலை பறிக்கிறார்கள்.. ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடி

உண்மையான சாய்வாலா அவர்களை தேயிலை தோட்டங்களுக்கு அழைத்து வந்துள்ளது. ஆனால் கவனமாக இருங்கள், உண்மையான மற்றும் சான்றளிக்கப்பட்ட சாய்வாலா எங்களுடன் உள்ளார். இவ்வாறு காங்கிரஸை அவர் மறைமுகமாக தாக்கினார். அண்மையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அசாம் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு சென்று இருந்தார். அப்போது பிவாநாத் மாவட்டத்தில் தேயிலை தோட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் நேரத்தை செலவிட்டார்.

மோடியை சாய்வாலா என கிண்டல் செய்தவர்கள் இன்று தேயிலை தோட்டத்தில் இலை பறிக்கிறார்கள்.. ராஜ்நாத் சிங்
தேயிலை இலை பறிக்கும் பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)

மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து அவர்கள் போல் முதுகில் கூடை அணிந்தபடி தேயிலை இலைகளை பறித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கடந்த சில தினங்களுக்கு முன் அசாம் சென்று இருந்தபோது, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தேயிலை தோட்டா தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.365ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.