கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன்!

கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை வழங்கும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ள்ளது. கடந்த வருடம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இந்த வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பெரிதாக எந்த வரவேற்பும் இல்லை. ஆனால் இம்முறை ஏராளமானோர் நிதியளித்து வருகின்றனர்.

கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன்!

குறிப்பாக யார் யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள், அந்த நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பதைப் பொதுவெளியில் காட்டப்படும் என்று அரசு உறுதியளித்ததே இப்போதைய வரவேற்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகிய மூவரும் 1 கோடி ரூபாய் காசோலையை ஸ்டாலினிடம் வழங்கினார்கள். இதேபோல நேற்று நடிகர் அஜித்குமார் 25 லட்சம் ரூபாயை வழங்கினார்.

கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன்!

தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஆயுள் கைதி ரவிச்சந்திரன் 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். சிறையில் சம்பாதித்த பணத்திலிருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பியிருக்கிறார். ஏற்கெனவே இவர் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 20 ஆயிரம் ரூபாயும், கஜா புயல் நிவாரண நிதிக்கு 5 ஆயிரம் ரூபாய் அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.