விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

 

விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதன்பிறகு ரஜினி அரசியல் யுத்தத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கட்சியும் தொடங்கவில்லை. வருகிற நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்கவுள்ளார் என்றும், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார் என்றும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது. இதனிடையே சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனக்கு முதல்வராகும் ஆசை இல்லை என்றும், கட்சி தலைமை வேறாகவும், ஆட்சி வேறாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் ஆன்லைன் அப்ளிகேஷனில் உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இதுபோன்ற திட்டம் நடைமுறைக்கு வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கையில் களமிறங்கியிருக்கும் சூழலில் ரஜினி மக்கள் மன்றத்தின் உடனடி உறுப்பினர் அடையாள அட்டை அன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு குறித்த அடுத்தக்கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.