“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்” – விஜய்வசந்த்

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்” – விஜய்வசந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான் என்று விஜய் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்” – விஜய்வசந்த்

தமிழக சட்டப்பேரவைக்கு திமுக – அதிமுக கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியான நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவு இழுபறியாக இருந்து வந்தது. அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் முதல்வர் பழனிசாமி தான் என்று கூறப்பட்ட நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவு செய்யும் என்று கூறி வந்தது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தமிழகத்தில் பாஜக சிறிய கட்சி, அதிமுக பெரிய கட்சி. அதனால் அதிமுக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றார். பாஜகவின் திடீர் முடிவுக்கு ரஜினி அரசியலுக்கு வரவப்போவதில்லை என்று அறிவித்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது.

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்” – விஜய்வசந்த்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த், ரஜினி அரசியலுக்கு வராதது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு பலம் தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், மாஸ்டர் படம் வெளியாவது தியேட்டர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்பதை காட்டுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.