ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொன்ன ரஜினி!

 

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொன்ன ரஜினி!

திமுக என்னும் மாபெரும் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று, நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலில் அவர் களம் காணவிருக்கிறார். இதனால், ஸ்டாலினின் இந்த பிறந்தநாள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி அவருக்கு கனிமொழி, தயாநிதி மாறன் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொன்ன ரஜினி!

ஸ்டாலினின் வீட்டுக்கே சென்று துரைமுருகன் வாழ்த்துக்கள் சொன்னார். முதல்வராக போட்டியிடும் ஸ்டாலினின் பிறந்தநாளை கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அதோடு, இன்று திமுகவின் பிரச்சார பாடலும் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் ஸ்டாலினே அரியணை ஏறுவார் என்று கூறுகின்றன.

ஸ்டாலினின் பிறந்தநாளில் அவரது தலைமையில் நல்லாட்சி மலர தொண்டர்கள் சபதமெடுத்திருக்கும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் அழைத்து ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.