ரசிகர்களை ஏமாற்றும் ரஜினிகாந்த்! சுயநல பயணம்!!

 

ரசிகர்களை ஏமாற்றும் ரஜினிகாந்த்! சுயநல பயணம்!!

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடபெங்களூரு புறப்பட்டுள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரியிலும் ரஜினி கட்சி தொடங்கவிருப்பதாக ரஜனி மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். வரும் 31ம் தேதி கட்சி தொடங்குவது பற்றி அறிவிக்க இருப்பதால் , கட்சி கொடி, கட்சி சின்னம் குறித்த மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டிருந்த ரஜினி, தனது அண்ணனை சந்திப்பதற்காக பெங்களூரு செல்கிறார்.

ரசிகர்களை ஏமாற்றும் ரஜினிகாந்த்! சுயநல பயணம்!!

கட்சி தொடங்குவதாக அறிவித்த பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால் அவரை சந்தித்து வாழ்த்து சொல்ல ரஜினிகாந்தின் ரசிகர்கள் போயஸ் தோட்ட இல்லத்திற்கு முன்குவிய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாளை அண்ணன் வீட்டில் கொண்டாட முடிவு செய்த ரஜினிகாந்த் பெங்களூரு செல்கிறார். அங்கு 12 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, 15 ஆம் தேதி முதல் ஐதரபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.