Home அரசியல் அரசியல் பிரவேசத்திலிருந்து பின்வாங்கும் ரஜினி? ‘வாட்ஸ்அப்’பில் வெளியான அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்படுமா?

அரசியல் பிரவேசத்திலிருந்து பின்வாங்கும் ரஜினி? ‘வாட்ஸ்அப்’பில் வெளியான அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்படுமா?

நடிகர் ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி உள்ளது.ஆனாலும் ரஜினி அரசியல் கட்சி குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்த ரஜினி இன்னமும் தனக்கான அரசியல் களத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சூழலில் தான் ரஜினி வெளியிட்டதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ந் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.இந்த கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். ‘உங்களுக்கு வயது 70. உங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால் இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்து தான் கவலை. நான் தொடங்குவதோ புது கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதை இப்போதே சொல்ல காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்த கொரோனா பிரச்சினை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்த காரணங்களை காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, என் உடல்நலத்தில் அக்கறையுள்ள என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்க சொன்னாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்பது போல அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அறிக்கை ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையானது உண்மை தான் எனும் பட்சத்தில் ரஜினி அரசியல் பிரவேசம் வெறும் பேச்சாகவே முடியும். இருப்பினும் ரஜினி தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து விரைவில் ரஜினி விளக்கம் அளிப்பார் என்று அவரது அபிமானிகள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

உங்களின் கனவு நிச்சயம் நிறைவேறும்! ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

“அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” – அமைச்சர் வேலுமணி

கோவை அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

நல்லவர் ஆட்சியில்தான் மழை பொழியும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

முல்லைப்பெரியார் அணையிலிருந்து 1,295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இத்திட்டம்...

புரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை!

வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என இந்திய வனைலை...
Do NOT follow this link or you will be banned from the site!