ஆரோக்கியம் போச்சுன்னா… வாழ்க்கையே போச்சு! – ரஜினியின் கொரோனா அட்வைஸ்

 

ஆரோக்கியம் போச்சுன்னா… வாழ்க்கையே போச்சு! – ரஜினியின் கொரோனா அட்வைஸ்

ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போய்விடும் எனவே கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசு தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போலத் தெரிகிறது. இதனுடைய வலி வரும் காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனையைத் தரும்.

ஆரோக்கியம் போச்சுன்னா… வாழ்க்கையே போச்சு! – ரஜினியின் கொரோனா அட்வைஸ் உங்களது குடும்பத்தாரின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பது தான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக் கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா… வாழ்க்கையே போச்சு” என்று கூறியுள்ளார்.