“ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் “- குருமூர்த்தி சந்திப்பின் பரபர பின்னணி !

 

“ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் “- குருமூர்த்தி சந்திப்பின் பரபர பின்னணி !

அரசியலுக்கு வரப்போவதில்லை என மறைமுகமாக ரஜினி தெளிவுபடுத்திய நிலையில், அரசியலுக்கு வரச்சொல்லி பாஜக தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினி சந்திப்பின் நோக்கம் அதுதான் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

“ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் “- குருமூர்த்தி சந்திப்பின் பரபர பின்னணி !

தமிழகத்தில் காலூன்ற பாஜக பல வகைகளில் முயன்றாலும், தமிழக அரசியல் களத்தில் அதற்கான சூழல் கடினமான ஒன்றாகவே உள்ளது என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர்ந்துள்ளனர். 2021 தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்திவிட வேண்டும் என முயன்றாலும், எங்களின் இலக்கு 2026 தேர்தல்தான் என்கிறார் தமிழக பாஜக நிர்வாகி ஒருவர்.

இது தொடர்பாக தமிழக பாஜக முக்கிய தலைவர்கள் கூறுகையில்,

“ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் “- குருமூர்த்தி சந்திப்பின் பரபர பின்னணி !

இப்போது வரை அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், ரஜினி வருகை, அரசியல் களத்தை மாற்றும் என்பதால், பாஜக தரப்பில் தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழக தலைவர்கள், அதிமுக கூட்டணி என நினைத்தாலும், டெல்லி தலைமை அதிமுக கூட்டணியை நம்பவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் தனியாகவும் தேர்தலை சந்திக்க முடியாது என்பதும் தெரியும்.

அதனால், ரஜினியை தனிக்கட்சி தொடங்க வைத்தே ஆக வேண்டும் என்பதே தற்போதையை மிகப்பெரிய அசைன்மெண்ட்டாக உள்ளது. கட்சி தொடங்க விருப்பமில்லாத நிலைக்கு ரஜினி வந்துவிட்டார் என்பதை மர்ம அறிக்கை உணர்த்திய நிலையில், அதை உண்மைதான் என்றும் ரஜினி தெரிவித்துவிட்டார். கட்சி தொடங்கி, அரசியல் செய்வதில் பல தடைகள் இருக்கும் என உணர்ந்த பின்னர், ரஜினி மெல்ல மெல்ல தனது ரசிகர்களையும் அதற்கு தயார் படுத்தி வருவதுதான் தொடர்ச்சிதான் அந்த அறிக்கை என கூறுகிறார்கள்.

“ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் “- குருமூர்த்தி சந்திப்பின் பரபர பின்னணி !

ஆனால், பாஜக மேலிடம் அதை ரசிக்கவில்லை. அதனால்தான் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் விசிட் அடித்து ரஜினியை நெருக்கி உள்ளார். தமிழகத்தில் அதிமுகவை நம்பாத பாஜக மேலிடம், ரஜினியை நம்பி பல திட்டங்களை போட்டுள்ளது என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கியுள்ளார். ஆனால், கட்சி தொடங்குவதில் உள்ள தயக்கங்களை ரஜினி தெரிவிதாலும், பாஜக தரப்பில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

கட்சிக்கு உடனடி அனுமதி, தனிச் சின்னம், தேர்தல் செலவுகள், வழக்குகள் எல்லாவற்றையும் தாங்கள் பார்த்துக் கொள்வதாக கூறப்பட்டதாம். அதுபோல, கட்சி தொடங்கி, தங்களோடு கூட கூட்டணி அமைக்க வேண்டாம், தனியாக நிற்கச் சொல்லியும் அறிவுரையாம்.

“ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் “- குருமூர்த்தி சந்திப்பின் பரபர பின்னணி !

தங்களோடு கூட்டணி அமைத்தால், பாஜக எதிர்ப்பு அலையில், ரஜினி காணாமல் போய்விடுவார். சிறுபான்மை மக்கள் ரஜினி மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். திமுக- அதிமுக கட்சிகள் தத்தமது செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாக அமைந்துவிடும் என்பதால், ரஜினி தனியாக நின்றால் போதும் என கூறப்பட்டதாம்.

ரஜினியின் தனிக்கட்சி, அதிமுக- பாஜக கூட்டணி என இரு முனைகள் மூலம் திமுகவை வீழ்த்த இந்த திட்டம் தரப்பட்டுள்ளதாம். ஆனால், ரஜினி உடனடியாக இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அவசரமில்லை ஜனவரி இறுதியில் இந்த நடவடிக்கைகளை செய்தால்போதும் என்பதும் கூறப்பட்டுள்ளது. தேர்தலில் ரஜினி பலம் நிரூபிக்கப்பட்டால், அதை அப்படியே 2026 தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்வது. நிரூபனம் ஆகவில்லை என்றால், அரசியல் தனக்கு வராது, ரசிகர்களுக்காக இறங்கினேன் என் அரசியலில் இருந்து விலகிக் கொள்வது எனவும் பேசப்பட்டுள்ளது.

அதாவது 2026 தேர்தலுக்கு, 2021 தேர்தலில் ரஜினியை பகடைக் காயாக பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் பாஜகவின் திட்டம். இந்த திட்டம் எல்லாம், டெல்லி மேலிடத்தின் முடிவுபடி நடப்பதாகவும் அந்த பாஜக பிரமுகர் தெரிவித்தார். ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதை ஆவலோடு எதிர்பார்ப்பது ரசிகர்கள் மட்டுமல்ல என்பதே இப்போதைய உண்மை.