ரஜினி அரசியல் 2.0 – சாத்தியம்தானா… தேவையற்ற எதிர்பார்ப்பா?

 

ரஜினி அரசியல் 2.0 – சாத்தியம்தானா… தேவையற்ற எதிர்பார்ப்பா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சுகள் இறுதிகட்டத்தில் இருக்கின்றன. 30 ஆண்டுகளாக இதோ, அதோ என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசம் நேற்றோடு ஒரு முடிவுக்கு வந்தது.

டிசம்பர் இறுதியில் அறிக்கை, ஜனவரியில் கட்சி என முடிவெடுத்த ரஜினி, ஹைதராபாத் சூட்டிங்கில் நேரடியாகக் கண்ட காட்சிகள் அரசியலுக்கு முழுக்கு போட வைத்துவிட்டன.

அவர் வெளியிட்ட அறிக்கையில் ’நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினி அரசியல் 2.0 – சாத்தியம்தானா… தேவையற்ற எதிர்பார்ப்பா?

ரஜினி முழு முற்றாகக் கூறியிருந்தாலும் ரஜினியின் அரசியல் வருகையை ரொம்பவே எதிர்பார்த்தவர்கள் இரு வகைகளான கருத்தை முன் வைக்கிறார்கள்.

நேரடி அரசியலில் ஈடுபட்டு, கட்சி தொடங்க மாட்டேன் என்றுதான் ரஜினி சொல்லியிருக்கிறாரே தவிர, தேர்தலின்போது ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுபார் என்று எதிர்பார்க்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், ‘அதிமுக – பாஜக கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார்’ என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம், ரஜினிக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. இன்னும் சில நாட்களில் தேறிவிடுவார். கொரோனா தடுப்பூசிகளும் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன. அதனால், சூழல் மாறும். எங்கும் சகஜமாகச் செல்லும் நிலை வரும். அப்போது ரசிகர்களின் தொடர் வற்புறுத்தலால் ரஜினி தன் முடிவை மாற்றிக்கொள்வார். அப்போது ரஜினி அரசியல் 2.0 செயல்பாடு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ரஜினி அரசியல் 2.0 – சாத்தியம்தானா… தேவையற்ற எதிர்பார்ப்பா?

இன்னும் சிலரோ, ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசனுக்கு ஆதரவு அளித்து வெல்ல வைப்பார் என்றும் நம்புகிறார்கள். இன்றைய பேட்டியில் கமல்ஹாசன்கூட ‘ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

இதற்கெல்லாம் சாத்தியம் இருக்கிறதா என்பதையு நாம் பார்க்க வேண்டும். ரஜினியின் திட்டப்படி சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பாவது கட்சிப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதனால்தான் இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து பணிகளை முடுக்கி விட்டிருந்தார்.

ஆனால், கொரோனா பரவல் அனைத்தையும் முடக்கியது. ஆயினும் ஜனவரி – மே எனும் 5 மாதங்களில் பெரும்பகுதி வேலைகளை முழு வீச்சில் செய்யலாம் என நினைத்தார். ஆயினும் கொரோனா பரவல் குறையாததாலும், நேரடியாக அவர் சில சாட்சிகளைப் பார்த்ததும் அச்சத்தை வர வழைத்து விட்டன.

ரஜினி அரசியல் 2.0 – சாத்தியம்தானா… தேவையற்ற எதிர்பார்ப்பா?

மேலும், இந்த தேர்தலில் விட்டுவிட்டு அடுத்த தேர்தலில் பார்க்கலாம் என்ற முடிவிலும் அவர் இல்லை. ஏனெனில், ஏற்கெனவே ஒரு பேட்டியில் ‘எனக்கு இப்போதே 71 வயதாகி விட்டது’ என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அடுத்த தேர்தலில் இவ்வளவு ஆக்டிவாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்கும் எழுந்திருக்கலாம்.

வாய்ஸ் கொடுப்பது நடக்குமா என்பது இப்போதைக்கு சொல்ல முடியாது. அவரை வாய்ஸ் கொடுக்க வைக்க அதிக முயற்சி எடுப்பது பாஜகதான். ஆனால், அது அதிமுக கூட்டணியில் இருக்கிறது. பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்து அது எடுபட வில்லை எனில் இன்னும் மோசமான பெயரே ரஜினிக்கு கிடைக்கும். அதனால், வாய்ஸ் கொடுபதற்கு அநேகமாக சாத்தியமில்லை. மேலும் ரஜினி அரசியல் 2.0 க்கு வாய்ப்பு குறைவிலும் குறைவே.