‘தலைவர் மனச நோகடிக்காதீங்க’ – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ரசிகர்கள்… அப்செட்டில் ‘ரஜினி’ மக்கள் மன்றம்

‘தலைவர் மனச நோகடிக்காதீங்க’ – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ரசிகர்கள்… அப்செட்டில் ‘ரஜினி’ மக்கள் மன்றம்

ரஜினியை அரசியலுக்கு வர வற்புறுத்தும் விதமாகப் போராட்டத்தில் ஈடுபடும் ரசிகர்களைக் கண்டித்து ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. போராட்டத்திற்கான செலவுகள் என்று கூறி ரஜினி பெயரில் நிதி வசூல் செய்யக் கூடாது என்றும் கண்டிப்புடன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் அரசியல் வருகை அத்தியாயத்திற்குக் கொரோனா பேரிடர் காலம் முடிவுரை எழுதியது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய உடல்நலனைக் கருத்தில் கொண்டு தான் அரசியலுக்குள் வரப் போவதில்லை என அவர் வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். இருபத்தைந்து ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் வருகைக்காக ஏங்கி தவித்த ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது அவரின் அறிவிப்பு.

‘தலைவர் மனச நோகடிக்காதீங்க’ – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ரசிகர்கள்… அப்செட்டில் ‘ரஜினி’ மக்கள் மன்றம்

ரசிகர்களில் ஒருசிலர் “தலைவர் உடல்நலன் தான் முக்கியம்; அவர் அரசியலுக்குள் நுழைய நாங்கள் வற்புறுத்த மாட்டோம்” என நாகரிகமாக ஒதுங்கி கொண்டுவிட்டார்கள். ஆனால் பெரும்பான்மையான ரசிகர்கள் ரஜினியின் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி அரசியலுக்கு வாருங்கள் என வற்புறுத்திவருகின்றனர்.

இதேபோன்ற சிறு சிறு போராட்டங்கள் ஆங்காங்கெ நடைபெற்று வந்தன. இதனைக் கண்டும் காணதது போல் ரஜினி விட்டுவிட்டார். இந்த நிலையில் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் ஒருங்கிணைந்து ஜனவரி 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான நிதியும் வசூல் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

‘தலைவர் மனச நோகடிக்காதீங்க’ – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ரசிகர்கள்… அப்செட்டில் ‘ரஜினி’ மக்கள் மன்றம்

இந்த விவகாரம் ரஜினியைச் சூடாக்கியுள்ளது போலும். இதை அப்படியே விட்டுவிட்டால் விபரீதம் ஆகிவிடும் என்று எண்ணிய அவர், உடனடியாக மன்ற நிர்வாகி விஎம் சுதாகரை அழைத்து அவசரமாக அறிக்கை வெளியிட பணித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “ரஜினி ரசிகர் மன்றத்துக்கும், ரஜினி மக்கள் மன்றத்துக்கும் வணக்கம். நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்த மருத்துவர்கள் ஆலோசனையையும் மீறி அரசியலுக்கு வரும் பட்சத்தில், ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் அரசியலுக்கு வர முடியாததை வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் வெளியிட்டார்.

‘தலைவர் மனச நோகடிக்காதீங்க’ – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ரசிகர்கள்… அப்செட்டில் ‘ரஜினி’ மக்கள் மன்றம்

அதன் பின்னரும், அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, அதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர், செலவுகளுக்கான நிதி வசூல் செய்வதாகவும், தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.

‘தலைவர் மனச நோகடிக்காதீங்க’ – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ரசிகர்கள்… அப்செட்டில் ‘ரஜினி’ மக்கள் மன்றம்

நம் தலைவரின் மீது அன்பும், அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் வருகை குறித்தான அறிக்கையில் ரஜினி மன்னிப்பு கேட்டும், அதனை ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயாராக இல்லை என்பதையே இந்தப் போராட்டங்கள் காட்டுகின்றன. தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியும் என்று உறுதியளித்தும் தன்னுடைய பேச்சை ரசிகர்கள் கேட்காததால் ரஜினி பயங்கர அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

25 வருசமாக ஏமாற்றத்தை மட்டுமே அளித்ததற்கான பலனை ரஜினி தற்போது அறுவடை செய்துவருவது தெளிவாகப் புலப்படுகிறது. மக்களையே எடுத்ததுக்கு எல்லாம் போராடாதீங்க என்று கடிந்துகொண்ட ரஜினி, தங்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்வார் என்று ரசிகர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ரசிகர்களின் அன்புத் தொல்லை ஒருபுறம் என்றால், ஜனவரி 14ஆம் தேதி பொங்கலையொட்டி தமிழ்நாட்டிற்கு வருகைதரவிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ரஜினியைச் சந்தித்து பொங்கல் வைக்க காத்திருக்கிறாராம்.

‘தலைவர் மனச நோகடிக்காதீங்க’ – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ரசிகர்கள்… அப்செட்டில் ‘ரஜினி’ மக்கள் மன்றம்

அரசியலுக்கு வரவில்லை என்றாலும் கூட தங்கள் கூட்டணிக்காக வாய்ஸ் கொடுக்க நிர்பந்தம் செய்ய திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டுவருகிறது. தேர்தல் அரசியலுக்குள் வராமல் மக்கள் சேவை செய்வது எப்படி, என்ற கேள்விக்குப் பதில் விரைவில்!