ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் : திமுகவில் ஐக்கியம்!

 

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் : திமுகவில் ஐக்கியம்!

தருமபுரியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்திருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தது வெறும் பேச்சோடு முடிந்து விட்டது. ஜனவரியில் நிச்சயம் கட்சி தொடங்குவேன் என்று கூறிவிட்டு ஹைதராபாத்திற்கு ஷூட்டிங்கிற்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த், சென்னை வந்த பிறகு தான் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அரசியலுக்கு வரக்கோரி ரஜினி ரசிகர்கள் போராட்டமெல்லாம் நடத்தியும் கூட, அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய ரஜினிகாந்த் தயாராக இல்லை.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் : திமுகவில் ஐக்கியம்!

இனி அவர் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார் என உணர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தற்போது, பிற கட்சிகளில் ஐக்கியமடைய தொடங்கியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் நேற்று தேனி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனை அறிந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பிற கட்சிகளில் இணையலாம் என்று ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் : திமுகவில் ஐக்கியம்!

இந்த நிலையில், தருமபுரியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் பிற கட்சியினரும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். பிரச்சாரத்திற்காக ஸ்டாலின் தருமபுரி சென்ற போது, அங்கேயே அவரது முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகியிருக்கின்றனர். மேலும் பலர் பிற கட்சிகளுக்கு செல்ல தயாராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.