கட்சியே இல்ல… சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ரஜினிகாந்த்

 

கட்சியே இல்ல… சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ரஜினிகாந்த்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ரஜினி தரப்பில் மக்கள் சேவை கட்சி எனும் பெயரில் விண்ணப்பம் வைத்ததற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கியது. ஆனால் 1996 சட்டமன்ற தேர்தலின்போது ‘அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைந்தால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று தெரிவித்திருந்தார். அப்போது அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்க நிலையில் வேறு முடிவை எடுத்தார்.

கட்சியே இல்ல… சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ரஜினிகாந்த்

அதன்பின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்துவிட்டு போர் என்ற சட்டமன்ற தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்வோம் எனக் கூறினார். ஆனால் தற்போது உடல்நிலையை காரணம் காட்டி அமைதியாக படம் நடிக்க போய்விட்டார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தது வெறும் பேச்சோடு முடிந்து விட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்காக பதிவு செய்யப்பட்ட மக்கள் சேவை கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட “ஆட்டோ ரிக்ஷா” சின்னத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திரும்ப ஒப்படைத்துவிட்டது.