நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!

 

நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடலூரை சேர்ந்த மனநலம் பாதித்த இளைஞருக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவி செய்துள்ளனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அடையாளம் தெரியாத நபர் போன் செய்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டு கேட் அருகில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேனாம்பேட்டை காவல்துறை உதவி ஆணையர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்த போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டிற்கு சென்றனர். வீட்டு காவலாளிகள் திடீரென மோப்பநாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வந்ததும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு விவரத்தை தெரிவித்த பிறகு ரஜினி வீட்டு வாசலில் இருக்கும் காவலாளிகள் அறை, கேட் பகுதி, தெரு முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் ரஜினி வசித்து வரும் தெரு முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தேனாம்பேட்டை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!

இந்த நிலையில் இன்று அந்த அழைப்பை விடுத்தது யார் என்று காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில் கடலூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த கடலூர் தேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஓ.எல்.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அந்த சிறுவன் இல்லத்திற்குச் சென்று விசாரித்தனர். மேலும் சிறுவன் மன நலம் பாதித்தவர் என்பதால் அவரின் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கி திரும்பியுள்ளனர். அத்துடன் உதவிகள் தேவைப்பட்டாலும் தங்களை அழைக்குமாறு கூறி வந்துள்ளனர்.