“ரஜினி அரசியலில் ஈடுபடக்கூறி கட்டாயப்படுத்த போராட்டம்; இது அவரை நோகடிக்கும் செயல்”

 

“ரஜினி அரசியலில் ஈடுபடக்கூறி கட்டாயப்படுத்த போராட்டம்; இது அவரை நோகடிக்கும் செயல்”

ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த நிலையில் வருகின்ற 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் போராட்டம் நடத்த ராமதாஸ் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர்கள் சிலர் அனுமதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினரும், ரசிகர்களும் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சந்தானம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

“ரஜினி அரசியலில் ஈடுபடக்கூறி கட்டாயப்படுத்த போராட்டம்; இது அவரை நோகடிக்கும் செயல்”

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் வணக்கம் நமது தலைவர் தன்னுடைய உடல் நலம் குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனைகளை மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின்ன் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், தான் அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். இந்த போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது. நம் தலைவரின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரசிகர் தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.