சீட்டு கிடைக்காததால் அமமுகவுக்கு ஓடினாயே ஓடுகாலிபயலே- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆத்திரம்

605

அமமுகவிற்கு சென்ற ராஜவர்மனை மறைமுகமாக சாடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சீட்டு கிடைக்காததால் ஓடினாயே ஓடுகாலிபயலே என விமர்சித்தார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி, “மாவட்டத்தில் 6 இடங்களில் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும். ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும், திமுக அதிமுகவை அழிக்க நினைக்கிறது. எனவே திமுகவை வேரோடு அழிக்க வேண்டும். உழைப்பை நம்பி பிழைக்க கூடியவர்கள் அதிமுகவினர். பிறரை நம்பி பிழைப்பவர்கள் திமுகவினர், வைகைச்செல்வன் 46,000 வாக்கு வித்தியாசத்தல் வெற்றி பெற வேண்டும். திமுகவில் இருப்பவர்கள் நோயாளிகள் போல் உள்ளவர்கள். அதிமுகவில் உள்ளவர்கள் இளைஞர்கள்.

சீட்டு கிடைக்காததால் அமமுகவுக்கு ஓடினாயே ஓடுகாலிபயலே- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆத்திரம்

வரும் ஆண்டு அதிமுகவிற்கு பொற்காலம் ஏனென்றால், புல்லுறுவிகள் ஓடிவிட்டார்கள். அருப்புக்கோட்டை எம்ஜிஆர் கோட்டை ஜெயலதாவின் கோட்டை எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டை, ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டை. அருப்புக்கோட்டையில் இரட்டை வெற்றி பெற்றது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். வைகைச்செல்வனுக்கும் எனக்கும் முன்பு சில பிரச்சனைகள் இருந்தாலும் வைகைச்செல்வன் அற்புதமான மனிதர். அவரை நல்ல மனிதர் என்றுதான் நான் கூறுவேன்” என பேசினார்