ஸ்டாலின் நானும் ரவுடிதான் என கூறுகிறார் ஆனால் யாரும் அவரை ரவுடியாக ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

ஸ்டாலின் நானும் ரவுடிதான் என கூறுகிறார் ஆனால் யாரும் அவரை ரவுடியாக ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

காங்கிரசும், திமுகவும் நாட்டில் கலவரம் வராதா, ஜாதி மோதல் வராதா அதன்மூலம் ஆட்சியை பிடிக்கலாமா என நினைக்கிறார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “திமுகவின் ஆர்எஸ்பாரதி பேச்சு அனைத்தும் தலித் விரோத பேச்சு, தீண்டாமை பேச்சு. திமுகவின் மீது உள்ள நட்பின் அடிப்படையிலேயே திருமாவளவன் அமைதி காக்கிறார், ஒரு நாள் வெடித்து எழுவார். 50 வருடத்திற்கு முன்பு அம்பாசிடர் கார் கூட இல்லாத கலைஞர் குடும்பத்திற்கு இன்று எத்தனை கார் உள்ளது. ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் முதல்வரின் எண்ணம் 1 1/2 கோடி தமிழக மக்களின் எண்ணம்.

ஸ்டாலின் நானும் ரவுடிதான் என கூறுகிறார் ஆனால் யாரும் அவரை ரவுடியாக ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரானா காலத்தில் குறை சொல்லி பிழைப்பு நடத்துகிறாரே என ஸ்டாலின் மக்கள் கேட்கின்றனர். வடக்கே இருந்து 350 கோடி கொடுத்து ஒருவரை விலைக்கு வாங்கி வந்து அறிவை பயன்படுத்துகிறார்கள் அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம். கள்ளச்சாரயத்தை தடுக்கவே டாஸ்மாக் திறக்கப்பட்டது. காங், திமுக நாட்டில் கலவரம், ஜாதி மோதல் வராதா அதில் ஆட்சியை பிடிக்கலாமா என நினைக்கிறார்கள்
ஸ்டாலின் நானும் ரவுடி ரவுடி என கூறுகிறார் யாரும் அவரை ரவுடி என ஏற்க மாட்டார்கள்.

மக்களை குடிக்க பழக்கி விட்டவர் கருணாநிதி அதை படிப் படியாக மறக்க வைக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அம்மா வாழ்த்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது நிதிமன்ற உத்தரவு அதை தமிழக அரசு ஏற்கும். ரஜினியும், கமலும் சினிமா மூலம் பல கோடி ரசிகர்களை பெற்ற அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையின்போது அமைதியாக இருக்கிறார்கள்” எனக்கூறினார்.