ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்

 

ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலும் அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்

நீதிபதி சத்திய நாராயணன், அமைச்சர் மீது வழக்குபதிவு செய்து ஆளுநரிடம் உரிய ஒப்புதல் பெற்று விசாரிக்க வேண்டும் என்றும், நீதிபதி ஹேமலதா, இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறார். இருநீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை அளித்திருப்பதால் வழக்கு அடுத்த விசாரணை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.