திருப்பதியை மிஞ்சிய உண்டியல் வசூல் : பணத்தை எண்ண முடியாமல் திணறிய ஊழியர்கள்

திருப்பதியை மிஞ்சிய உண்டியல் வசூல்  : பணத்தை எண்ண முடியாமல் திணறிய ஊழியர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலை காட்டிலும் உண்டியல் வசூலில் மிஞ்சிய கோவில் ஒன்று ராஜஸ்தானில் அமைந்துள்ளது.

திருப்பதியை மிஞ்சிய உண்டியல் வசூல்  : பணத்தை எண்ண முடியாமல் திணறிய ஊழியர்கள்

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் ஸ்ரீ சன்வாலிய சேத் கோவில் அமைந்துள்ளது. இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இந்த கோவிலில் அமாவாசைக்கு முந்தைய தினம் உண்டியல் காணிக்கையை எண்ணுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் கோவில் ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியை மேற்கொண்டனர். வழக்கத்தை விட அதிகளவில் பணம் நிரம்பி வழிந்தது.

திருப்பதியை மிஞ்சிய உண்டியல் வசூல்  : பணத்தை எண்ண முடியாமல் திணறிய ஊழியர்கள்

இதனால் பணத்தை எண்ணமுடியாமல் ஊழியர்கள் சோர்வடைந்தனர். கட்டுக்கட்டாக இருந்த பணத்தை ஒரேநாளில் எண்ண முடியாது என்பதால் பணியானது நேற்றும் நடைபெற்றது. முதல் நாள் முடிவில் உண்டியலில் 6 கோடியே 17 லட்சத்து பன்னிரெண்டாயிரத்து இருநூறு ரூபாய் எண்ணப்பட்டுள்ளது. அத்துடன் 91 கிராம் தங்கம், 4 கிலோ 200 கிராம் வெள்ளியும் இருந்துள்ளது. வழக்கத்தை விட இந்த மாதம் அதிக பணம் உள்ளதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெற்று வருகிறதாம். திருப்பதி ஏழுமலையான் கோவிலை காட்டிலும் அதிகளவு உண்டியல் வசூலை இக்கோயில் வாரி குவித்துள்ளதாம்.