திருமணத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி

 

திருமணத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கூடினால் விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.25 ஆயிரமாக அம்மாநில அரசு அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூடினால் அபராதமாக ரூ.10 ஆயிரமும், பொது இடங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதமாகவும் விதிக்கப்பட்டது. ஆனாலும் அம்மாநில மக்கள் அதனை கண்டு கொள்ளாமல் அவர்கள் அலட்சியமாக உள்ளனர். தற்போது ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

திருமணத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி
முதல்வர் அசோக் கெலாட்

இதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த சனிக்கிழமையன்று ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானர், கோடா, ஆழ்வார், உதய்பூர் மற்றும் அஜ்மீர் ஆகிய மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அறிவித்தது. இந்த சூழ்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமயில் கோவிட்-19 தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அசோக் கெலாட் கூறியதாவது:

திருமணத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி
மாஸ்க் அணியாமல் செல்லும் பொதுமக்கள்

ராஜஸ்தானில் அறிவிக்கப்பட்டபடி, எட்டு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் இருக்க கூடாது. ஒவ்வொருவரும் மாஸ்க் அணிய வேண்டம். திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கூடினால் விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.25 ஆயிரமாகவும், மாஸ்க் அணியாதற்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.