கொரோனா தடுப்பு மருந்தை களவாடிய திருடர்கள்!

 

கொரோனா தடுப்பு மருந்தை களவாடிய திருடர்கள்!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை களவாடிய திருடர்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பி வழும் சூழலில், ஆங்காங்கே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவுகிறது. மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லையென்றால் பாதிப்பை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. அதனால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கன்வாட்டியா என்ற மருத்துவமனையில் 320 டோஸ் கொரோனா தடுப்பூசியை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. தடுப்பூசிகள் திருட்டுதனமாக கள்ள சந்தையில் விற்க திருடப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரை நடத்திவருகின்றனர். முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜெய்ப்பூரில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடதக்கது.