2 நாள் கெடு விதித்த காங்கிரஸ்… மன்னிப்பு கேட்பாரா சச்சின் பைலட்?

 

2 நாள் கெடு விதித்த காங்கிரஸ்… மன்னிப்பு கேட்பாரா சச்சின் பைலட்?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டங்களில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கலந்து கொள்ளவில்லை. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல்தான் இதற்கு காரணம்.

2 நாள் கெடு விதித்த காங்கிரஸ்… மன்னிப்பு கேட்பாரா சச்சின் பைலட்?

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளை காங்கிரஸ் தலைமை பறித்து கொண்டது. தற்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதற்கு விளக்கம் கேட்டு சச்சின் பைலட்டுக்கு அந்த கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2 நாள் கெடு விதித்த காங்கிரஸ்… மன்னிப்பு கேட்பாரா சச்சின் பைலட்?

இது தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதற்கு சச்சின் பைலட் மற்றும் 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் அவர்கள் பதில் அளிக்கவில்லையென்றால், அவர்கள் சி.எல்.பி-லிருந்து தங்களது உறுப்பினர் பதவியை விலக்கி கொள்கிறார்கள் என்று கருதப்படும் என தெரிவித்தார். அதேசமயம் ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரமாட்டேன், நான் காங்கிஸ் உறுப்பினர்தான் என சச்சின் பைலட் நேற்று உறுதியாக தெரிவித்தார். ஆகையால் சச்சின் பைலட் கூட்டத்தில் கலந்து கொள்ளாதற்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் பதவிகளை பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேசப்படுகிறது. அதேசமயம் அவர் தனிக்கட்சி தொடங்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்.