ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் எங்களுக்குத் தொடர்பில்லை! – ஹரியானா முதல்வர் திட்டவட்டம்

 

ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் எங்களுக்குத் தொடர்பில்லை! – ஹரியானா முதல்வர் திட்டவட்டம்

ஹரியானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள விவகாரத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் எங்களுக்குத் தொடர்பில்லை! – ஹரியானா முதல்வர் திட்டவட்டம்ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை ஹரியானா மாநிலத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். அவர்களை பா.ஜ.கதான் பின்னணியில் இருந்து இயக்குவதாகவும், அவர்கள் தங்குவதற்கான செலவு மொத்தத்தையும் பா.ஜ.க தான் செய்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின.

ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் எங்களுக்குத் தொடர்பில்லை! – ஹரியானா முதல்வர் திட்டவட்டம்இது குறித்து ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தனியார் ஹோட்டல்களில் அனைவருக்குமானது… யார் வேண்டுமானாலும் தங்கலாம். ஹரியானா மாநில அரசுக்கும் பா.ஜ.க-வுக்கும் அதில் தொடர்பில்லை” என்றார்.