3 நாட்களில் இதை செய்யணும்..நடிகை ரைசாவுக்கு மருத்துவரின் வக்கீல் நோட்டீஸ்!

 

3 நாட்களில் இதை செய்யணும்..நடிகை ரைசாவுக்கு மருத்துவரின் வக்கீல் நோட்டீஸ்!

மாடல் அழகியும், பிக் பாஸ் பிரபலமுமான நடிகை ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்ந்த இவர், தற்போது காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அண்மையில் ரைசா வில்சன், தோல் மருத்துவர் பைரவி மீது புகார் கொடுத்துள்ளார். அதில் மருத்துவர் பைரவி முகப்பொலிவுக்கு செய்த dermal fillers சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும், மருத்துவரை தொடர்பு கொள்ள முயன்றபோது வெளியூர் சென்று விட்டதாக அலட்சியம் செய்ததாக ரைசா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

3 நாட்களில் இதை செய்யணும்..நடிகை ரைசாவுக்கு மருத்துவரின் வக்கீல் நோட்டீஸ்!

இந்நிலையில் இந்நிலையில் திடீர் திருப்பமாக தோல் சிகிச்சை மருத்துவரும் பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்குமாறு கோரியுள்ளார். அதில் சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகை ரைசா 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,மன்னிப்பு கேட்காவிட்டால், மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்றும் மருத்துவர் பைரவி செந்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரைசாவிற்கு ஏற்பட்டுள்ளது பயப்படக்கூடிய பக்க விளைவுகள் இல்லை என்றும், இயற்கையாகவே குணமடையக்கூடியது என்றும் அந்த நோட்டீஸில் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்