பூந்தமல்லி பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி

பூந்தமல்லி பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி

சென்னை

சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட

பூந்தமல்லி பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி

சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால், காலை வேலையில் பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மழைநீரில் ஊர்ந்து சென்றனர். இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம்

பூந்தமல்லி பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி

சார்பில் ராட்சத வாகனங்களைக் கொண்டு சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உறிஞ்சி எடுத்து செல்லும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பூந்தமல்லி பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.