4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

 

4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த மழையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது. இதனால் விவசாய பயிர்கள் நாசமாகின. வடகிழக்கு பருவமழை இந்தாண்டு அதிகளவு பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.வளிமண்ட கீழடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது.

4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

இந்நிலையில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது