தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

 

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ரயில் பாதை அமைக்கும் பணிகள் குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

பொது முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டண வசூல் இல்லை என்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். முன்னதாக ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்றும் ரயில்வே விரிவாக்கம், நவீனமயம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.50 லட்சம் கோடி நிதி முதலீடு தேவைப்படுகிறது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார்.