ராமர் என்றால் அன்பு, இரக்கம், நீதி: ராகுல்காந்தி

 

ராமர் என்றால் அன்பு, இரக்கம், நீதி: ராகுல்காந்தி

ராமர் என்றால் அன்பு, இரக்கம், நீதி எனப்பொருள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில், அது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இந்தியில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், ராமர் என்றால் அன்பு, இது ஒருபோதும் வெறுப்பில் தோன்றாது – ராம் என்றால் கருணை, இது ஒருபோதும் கொடூரமாகத் தோன்ற முடியாது -ராம் என்றால் நீதி, இது ஒருபோதும் அநீதியில் தோன்ற முடியாது எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். ராமபிரான் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு என்று ராகுல் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆரம்ப காலம் தொட்டே ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே தன்னை வெளிக்காட்டி வந்த காங்கிரஸ் கட்சியில், நேரு குடும்பத்தில் பிரியங்கா காந்தியைத் தொடர்ந்து ராகுல் காந்தியும் ராமர் குறித்து வெளிப்படையாக கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.