பாஜகவின் வசம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்!- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

 

பாஜகவின் வசம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்!- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக -அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு 5 எம்பி சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக -அதிமுக உடனே கைகோர்த்தது. இதனிடையே வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி. இறுதியாக, அமெரிக்க ஊடகங்கள் பேஸ்புக் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளன எனக்கூறி செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.