Home தமிழகம் ராகுல் காந்தி வருகை - திமுக காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் ஏற்படுத்துமா?

ராகுல் காந்தி வருகை – திமுக காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் ஏற்படுத்துமா?

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது காங்கிரஸ் கட்சி. திமுகவுக்கு அடுத்தது பெரிய கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான்.

ஆனால் சமீப நாட்களாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வெல்வேன். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று திமுகவின் முக்கிய தலைவர் ஜெகத்ரட்சகன் மேடையிலேயே அறிவித்தார். அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் நாங்கள் வெல்வோம் என்று சொன்னேன். நாங்கள் என்றால் திமுக காங்கிரஸ் கூட்டணியைதான் என்று சமாளிக்கிறார் ஜெகத்ரட்சகன்.

ஆனாலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இதுதொடர்பாக பேச்சு வார்த்தை டெல்லி அளவிலும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ராகுல்காந்திக்கு திமுகவின் நிலைப்பாடு மீது அதிருப்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலாக முன்மொழிந்தது திமுக என்பதால் காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாட்டில் எவ்வித சமரசமும் இன்றி திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டுமென்று விரும்பியது. ஆனால் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் காங்கிரஸ் கட்சியை சுமையாகக் கருதுகிறார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிக சொற்பமான எண்ணிக்கையில் தான் திமுக இடங்கள் ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கமலஹாசனுடன் கூட்டணி அமைப்பது அல்லது கமல்ஹாசனை திமுக கூட்டணிக்கு அழைப்பது என்று பேசிவருகிறார்கள்.

ராகுல்காந்தி 23ஆம் தேதி தமிழகம் வருகிறார். அவர் கோவையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது அவரைச் சந்திக்கும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியினர் திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ராகுல் காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் இருந்தது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது வெளிப்படையாக சில விஷயங்களை பேச முடியவில்லை என்றும் சொல்லுகிறார்கள். அதனால் இந்த முறை ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் அடித்து கேட்க அனுமதிக்குமாறு கேட்க உள்ளனர்.

ராகுல் காந்தி

ஆனால் திமுகவில் இருந்து 25க்கு மேல் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ராகுல் காந்தியின் வருகையும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்பதுதான் இப்போது பரபரப்பான கேள்வியாக மாறியிருக்கிறது. மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு. ஆனால், இரு கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படலாம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...

ஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...

அதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...
TopTamilNews