ராகுல் காந்தி இன்று பெங்களூரு வருகிறார்… ஆஸ்கார் பெர்னாண்டஸ் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்

ராகுல் காந்தி இன்று பெங்களூரு வருகிறார்… ஆஸ்கார் பெர்னாண்டஸ் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்

ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸ்கார் பெர்னாண்டஸ் தனது 80 வயதில் கடந்த திங்கட்கிழமையன்று காலமானார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1941ல் ஆஸ்கார் பெர்னாண்டஸ் பிறந்தார். அவர் உடுப்பி நகராட்சி கவுன்சில் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1980, 1984, 1989, 1991 மற்றும் 1996ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உடுப்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டில் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு ஆஸ்கார் பெர்னாண்டஸ் மிகவும் நெருக்கமாக இருந்தவர்.

ராகுல் காந்தி இன்று பெங்களூரு வருகிறார்… ஆஸ்கார் பெர்னாண்டஸ் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்
ஆஸ்கார் பெர்னாண்டஸ்

ஆஸ்கார் பெர்னாண்டஸின் இறுதி சடங்கு இன்று மதியம் நடைபெற உள்ளது. முன்னதாக பெங்களூருவில் உள்ள கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெர்னாண்டஸ் உடலுக்கு மரியாதை செலுத்துவது தொடங்குகிறது. பின்னர் புனித பேட்ரிக் தேவாலயத்தில் இறுதி ஆசிர்வாதம் மற்றும் மாலை 3.30 மணி முதல் ஒசூர் கல்லறையில் அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி இன்று பெங்களூரு வருகிறார்… ஆஸ்கார் பெர்னாண்டஸ் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்
காங்கிரஸ்

ஆஸ்கார் பெர்னாண்டஸின் இறுதி சடங்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதி சடங்கில் பங்கேற்பதாக ராகுல் காந்தி இன்று காலை பெங்களூரு வருகிறார். பின் ஆஸ்கார் பெர்னாண்டஸின் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார். ராகுல் காந்தி வருகை காரணமாக கர்நாடக காங்கிரசார் பரபரப்பாகி உள்ளனர்.