பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு போராட்டம் மிகவும் தீவிரமாக உள்ளது.

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…
ராகுல் காந்தி

இந்த சூழ்நிலையில் பஞ்சாபில் ராகுல் காந்தி மற்றும் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் பேரணியை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்ட பேரணிகளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் ஹரிஷ் ராவத் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் ஆகியோருடன் அனைத்து பஞ்சாப் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்கள்.

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…
முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

காங்கிரஸ் மேற்கொள்ள இருக்கும் டிராக்டர் பேரணியை மாநிலம் முழுவதும் உழவர் அமைப்புகளால் ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த டிராக்டர் பேரணியில் மொத்தம் 50 கி.மீட்டர் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. கடுமையான கோவிட்-19 நெறிமுறைகள் மத்தியில் ஒவ்வொரு நாளும் காலையில் 11 மணிக்கு டிராக்டர் பேரணி தொடங்கும், பொது கூட்டங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.