அனல் பறக்கும் தேர்தல் களம் : ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!

 

அனல் பறக்கும் தேர்தல் களம் : ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இன்று 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.

அனல் பறக்கும் தேர்தல் களம் : ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது . அத்துடன் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் தேசிய தலைவர்கள் முகாமிடும் நிலையும் அதிகரித்து வருவதை நம்மால் காணமுடிகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி கோவைக்கு வருகை புரிந்து அங்கு நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.அத்துடன் இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனல் பறக்கும் தேர்தல் களம் : ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் . தமிழகத்திற்கு வருகை புரியும் அவர் தூத்துக்குடி, நெல்லை ,தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை 10:45 மணிக்கு தூத்துக்குடி வரும் ராகுல் காந்தி அங்கிருந்து சாலை மார்க்கமாக வஉசி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார். அதைத் தொடர்ந்து பிற்பகல் 12 .45 மணிக்கு தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே மக்களிடம் வாக்கு சேகரிக்கும் அவர் , உப்பளத் தொழிலாளர்களை மதியம் 1.20க்கு சந்தித்து பேசுகிறார். மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பரப்புரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, மாலை 6 மணிக்கு நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.