சூடு பிடிக்கும் அரசியல் களம்: ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை!

 

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று புதுச்சேரி வருகிறார் ராகுல் காந்தி

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை!

புதுச்சேரியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் , ஜான்குமார் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்கள் உள்ளதால் முதல்வர் நாராயணசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி உண்டாகியுள்ளது. எனவே முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறியிருந்தார். இதை மறுத்த முதல்வர் நாராயணசாமி, விரைவில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார். இதை தொடர்ந்து அதிரடி திருப்பமாக அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை!

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் ஒருநாள் பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி . 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராகுல் புதுச்சேரி வருகிறார். காலை 11 மணிக்கு புதுச்சேரி வரும் ராகுல் முத்தியால்பேட்டை சோலை நகரில், மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. மாலை 3 மணிக்கு ஏ.எப்.டி மைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.