ஆபத்தான நிலையில் இந்தியா… ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!

 

ஆபத்தான நிலையில் இந்தியா… ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!

நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமாகப் பரவிவருகிறது. பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில், மீதமிருக்கும் 3 கட்ட வாக்குப்பதிவை மொத்தமாக ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை திருணாமுல் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டது.

ஆபத்தான நிலையில் இந்தியா… ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!

ஆனால் தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக பிரச்சாரங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மிக முக்கியமாக மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆனால் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் அறிகுறி தென்படவில்லை. அதைப் பிரச்சாரம் செய்யும் தலைவர்களும் கண்டுகொள்வதில்லை.

இதை உணர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்கத்தில் தான் மேற் கொள்ள திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் எனது அனைத்து விதமான தேர்தல் பிரச்சாரங்களையும் ரத்து செய்கிறேன். தற்போதுள்ள சூழலில் மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சார ஊர்வலம் ஆகியவை நடத்த வேண்டுமா என்பதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.