இந்தியாவின் உலகளாவிய உத்தி சுக்குநூறாகி விட்டது… மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு..

இந்தியாவின் உலகளாவிய உத்தி சுக்குநூறாகி விட்டது… மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு..

ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளுடன் கடல் வழியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக ஈரானில் சாப்ஹர் துறைமுகத்தை இந்தியா கட்டமைத்து வந்தது. அத்துறைமுகத்தையும், ஆப்கானிஸ்தான் எல்லையான ஜாஹதீன் பகுதியையும் இணைக்கும் வகையில், 628 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கவும் இந்தியா-ஈரான்-ஆப்கானிஸ்தான் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவின் உலகளாவிய உத்தி சுக்குநூறாகி விட்டது… மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு..

சாப்ஹர் துறைமுகம் தொடர்பான திட்டங்களில் பணியாற்ற எந்தவொரு இந்திய நிறுவனமும் முன்வரவில்லை. அமெரிக்கா தங்களை குறிவைத்து தடை விதிக்க வாய்ப்புள்ளதால் துறைமுக திட்டத்தில் பங்கேற்பதில்லை என நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சாப்ஹார் துறைமுகத்தை இணைக்கு ரயில் திட்டத்தை ஈரான் ரயில்வே இந்தியாவின் உதவியின்றி தன்னிச்சையாக தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு இந்தியாவிடமிருந்து வரவேண்டிய ரூ.12 ஆயிரம் கோடி வர தாமதம் ஆவதால், நாங்களே ரயில் திட்டத்தை தொடங்கி விட்டோம் என ஈரான் ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உலகளாவிய உத்தி சுக்குநூறாகி விட்டது… மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு..

ஈரான் ரயில் திட்டத்தை இந்தியா தவற விட்டது தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், இந்தியாவின் உலகளாவிய உத்தி சுக்குநூறாகி விட்டது. நாம் அதிகாரத்தை மற்றும் மரியாதையை எல்லா இடத்திலும் இழந்து விட்டோம். என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை இந்திய அரசுக்கு இல்லை என பதிவு செய்து இருந்தார்.