அசாம் உடன்படிக்கையை யாரும் தொட நினைத்தால் காங்கிரஸ் பாடம் கற்பிக்கும்.. ராகுல் காந்தி

 

அசாம் உடன்படிக்கையை யாரும் தொட நினைத்தால் காங்கிரஸ் பாடம் கற்பிக்கும்.. ராகுல் காந்தி

அசாம் உடன்படிக்கையை யாரும் தொட நினைத்தால் அவர்களுக்கு காங்கிரசும், அசாம் மாநில மக்களும் இணைந்து பாடம் கற்பிப்பார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய பா.ஜ.க. அரசின் ஆட்சி காலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் எண்ணத்தில் அம்மாநிலத்தில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்), சி.பி.ஐ. (எம்.எல்.) மற்றும் ஏ.ஜி.எம். ஆகிய 5 கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்துள்ளது.

அசாம் உடன்படிக்கையை யாரும் தொட நினைத்தால் காங்கிரஸ் பாடம் கற்பிக்கும்.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அசாமில் காங்கிரஸ் கட்சிக்காக அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். அம்மாநிலத்தில் சிவசாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில் கூறுகையில், அசாம் உடன்படிக்கை தொட அல்லது வெறுப்பை பரப்ப யாரும் முயற்சித்தால் காங்கிரசும், மக்களும் இணைந்து அவர்களுக்கு பாடம் கற்பிப்போம். அசாமை உடைக்கும் சக்தி இந்த உலகில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நோ சி.ஏ.ஏ. என்ற பிரிண்ட் செய்யப்பட்ட காம்சாக்கள் (சால்வைகள்) அணிந்து இருந்தனர்.

அசாம் உடன்படிக்கையை யாரும் தொட நினைத்தால் காங்கிரஸ் பாடம் கற்பிக்கும்.. ராகுல் காந்தி
ஹிமந்தா பிஸ்வா சர்மா

நோ சி.ஏ.ஏ. சால்வை குறித்து அம்மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில கல்வித்துறை அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) குறித்து யாரும் விவாதம் செய்யவில்லை. சமூக வலைதளத்தில் இதனை நீங்கள் ஆய்வு செய்யலாம். மாணவிகளுக்கு ஸ்கூட்டர் அரசு வழங்குவதை, மாணவர்களுக்கு எந்த இருசக்கர வாகனம் கிடைக்கும் என்பது குறித்து விவாதிப்பதில் மக்கள் பிசியாக உள்ளனர். காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கு பின்னால் உள்ளது. பழைய பிரச்சினைகளை கொண்டு வருகிறது. இந்த நிலத்தில் இந்திய மற்றும் அசாமிய கலாச்சாரத்தை பாதுகாப்பதில் நான் ஒரு தீவிரவாதி. யாராவது எனக்கு இந்த பட்டத்தை வழங்கியிருந்தால், தயவுசெய்து எனது அன்பையும் , நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.