பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதல் குறைவு… ராகுல் காந்தி தாக்கு

 

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதல் குறைவு… ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதலில் குறைவு உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் வாஷிங்டனில் கேபிடல் ஹில்லில் (அந்நாட்டு பாராளுமன்றம்) டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நமது பிரதமர் மோடி டிவிட்டரில், வாஷிங்டன் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளை கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒழுங்காகவும், அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறைகளை தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று என்று பதிவு செய்து இருந்தார்.

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதல் குறைவு… ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது: இந்த முறை டிரம்ப் அரசு என்று பிரதமர் மோடி சொன்னது எனக்கு நினைவு உள்ளது. நாட்டின் பிரதமராக அப்படி எதுவும் சொல்லக்கூடாது ஏனென்றால் அப்படி செய்வது அமெரிக்கர்களை அவமதிப்பதாகும்.

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதல் குறைவு… ராகுல் காந்தி தாக்கு
அமெரிக்க பாராளுமன்றத்தில் வன்முறை

இது அவர்களின் விருப்பம், உங்கள் விருப்பம் அல்ல. உங்களுக்கு அடிப்படைகளை பற்றிய புரிதல் குறைவு. தற்போது டிரம்ப் நிச்சயமாக தோற்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மோடி மவுனமாக இருக்கிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.