லட்சத்தீவுகள் விவகாரம்… அதிகாரத்தில் இருக்கும் அறிவற்ற பெரியவர்கள் அழிக்கிறார்கள்.. ராகுல் காந்தி

லட்சத்தீவுகள் விவகாரம்… அதிகாரத்தில் இருக்கும் அறிவற்ற பெரியவர்கள் அழிக்கிறார்கள்.. ராகுல் காந்தி

லட்சத்தீவுகள் நிர்வாக விவகாரத்தை குறிப்பிட்டு அதிகாரத்தில் இருக்கும் அறிவற்ற பெரியவர்கள் லட்சத்தீவை அழிக்கிறார்கள் என்று மத்திய அரசை ராகுல் காந்தி தாக்கினார்.

நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவுகள். இதன் நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மாக கடந்த டிசம்பரில் காலமானார். இதனையடுத்து மத்திய அரசு குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் பிரபுல் கோடா படேலை லட்சத்தீவுகளின் பொறுப்பு நிர்வாகியாக நியமனம் செய்தது. அவர் பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் மிகவும் நெருக்கமானவர். பொறுப்பு அதிகாரியான பிரபுல் படேல், லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற அந்த யூனியன் நிலவுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்தார். இதனால் அங்கு யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும்.

லட்சத்தீவுகள் விவகாரம்… அதிகாரத்தில் இருக்கும் அறிவற்ற பெரியவர்கள் அழிக்கிறார்கள்.. ராகுல் காந்தி
பிரபுல் படேல்

அடுத்ததாக லட்சத்தீவுகளின் பிரதான உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி இடம் பெற்றுள்ளது அதனை தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள், கடலோர மக்களின் குடில்கள் அகற்றம், மதுவிலக்கு நீக்கம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கலைப்பு என பல்வேறு மாற்றங்களை பிரபுல் படேல் கொண்டு வந்தார். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லட்சத்தீவுகளின் பொறுப்பு நிர்வாகியாக பிரபுல் படேலை நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்தீவுகள் விவகாரம்… அதிகாரத்தில் இருக்கும் அறிவற்ற பெரியவர்கள் அழிக்கிறார்கள்.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

லட்சத்தீவுகள் நிர்வாக விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், கடலில் இந்தியாவின் ஆபரணம் லட்சத்தீவு . அதிகாரத்தில் இருக்கும் அறிவற்ற பெரியவர்கள் அதை அழிக்கிறார்கள். நான் லட்சத்தீவு மக்களுடன் நிற்கிறேன் என்று பதிவு செய்து உள்ளார்.