மாநிலங்களுக்கு கொடுக்க பணம் இல்லை.. ஆனால் ரூ.8,400 கோடியில் விமானங்கள்… மோடியை தாக்கிய ராகுல் காந்தி..

மாநிலங்களுக்கு கொடுக்க பணம் இல்லை..  ஆனால் ரூ.8,400 கோடியில் விமானங்கள்… மோடியை தாக்கிய ராகுல் காந்தி..

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்காத பிரதமர் மோடி தலைமயிலான அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தினந்தோறும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் தாக்கி வருகிறார். அதுமாதிரி தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் ரூ.8,400 கோடியில் பிரதமர்,குடியரசு தலைவர் மற்றும் விவிஐபிகளுக்காக மத்திய அரசு வாங்கிய 2 அதிநவீன விமானங்கள் தொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மாநிலங்களுக்கு கொடுக்க பணம் இல்லை..  ஆனால் ரூ.8,400 கோடியில் விமானங்கள்… மோடியை தாக்கிய ராகுல் காந்தி..
பிரதமர் மோடி

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், 1. மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாயை உறுதி அளித்தது. 2.பிரதமர் மோடி மற்றும் கோவிட்-19ஆல் நாட்டின் பொருளாதாரம் சிதைந்தது. 3. பிரதமர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வரி விலக்கு அளித்தார், தனக்கு ரூ.8,400 கோடியில் 2 விமானங்களை வாங்குகிறார்.

மாநிலங்களுக்கு கொடுக்க பணம் இல்லை..  ஆனால் ரூ.8,400 கோடியில் விமானங்கள்… மோடியை தாக்கிய ராகுல் காந்தி..
நிர்மலா சீதாராமன்
  1. மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசிடம் பணம் இல்லை. மத்திய நிதியமைச்சர் மாநிலங்களை கடன் வாங்க சொல்கிறார். உங்கள் முதல்வர் ஏன் உங்களின் எதிர்காலத்தை மோடிக்காக அடகு வைக்கிறார்? என பதிவு செய்து இருந்தார்.