மகாத்மா காந்தியின் வாசகத்தை குறிப்பிட்டு, மோடி அரசிடம் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரிய ராகுல்

மகாத்மா காந்தியின் வாசகத்தை குறிப்பிட்டு, மோடி அரசிடம் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரிய ராகுல்

மகாத்மா காந்தியின் வாசகத்தை குறிப்பிட்டு, வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மோடி அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசுதினமான நேற்று முன்தினம் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.

மகாத்மா காந்தியின் வாசகத்தை குறிப்பிட்டு, மோடி அரசிடம் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரிய ராகுல்
விவசாயிகள், போலீசார் மோதல்

இதனால் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது.இதன் எதிரொலியாக போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர். இந்த சூழ்நிலையில் வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தியின் வாசகத்தை குறிப்பிட்டு, மோடி அரசிடம் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரிய ராகுல்
பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், ஒரு மென்மையான வழியில் நீங்கள் உலகை நகர்த்த முடியும்- மகாத்மா காந்தி. விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை உடனடியாக திரும்ப பெறுமாறு மோடி அரசிடம் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்து உள்ளார்.