பட்டப்பகலில் இரு கைகளாலும் கொள்ளையடிக்கும் மத்திய அரசு.. ராகுல் காந்தி தாக்கு

 

பட்டப்பகலில் இரு கைகளாலும் கொள்ளையடிக்கும் மத்திய அரசு.. ராகுல் காந்தி தாக்கு

எரிபொருள் மீதான அதிக வரி, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை ஆகியவற்றை குறிப்பிட்டு மத்திய அரசு இரு கைகளாலும் பட்டப்பகலில் கொள்ளையடிக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 4 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக பலமாக பேச்சு அடிப்பட்டது.

பட்டப்பகலில் இரு கைகளாலும் கொள்ளையடிக்கும் மத்திய அரசு.. ராகுல் காந்தி தாக்கு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி பணியாளர்கள் சங்கம் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எரிபொருட்கள் மீதான அதிகவரி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பட்டப்பகலில் இரு கைகளாலும் கொள்ளையடிக்கும் மத்திய அரசு.. ராகுல் காந்தி தாக்கு
வங்கி ஸ்டிரைக்

ராகுல் காந்தி டிவிட்டரில், பட்டப்பகலில் மத்திய அரசு இரண்டு கைகளுடன் கொள்ளையடிக்கிறது. கியாஸ், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான அதிகமான வரி வசூல். பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளை நண்பர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் பொதுமக்களிடமிருந்து வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் பங்கு பறிக்கிறது. பிரதமர் மோடியின் ஒரே நன்மை. நாட்டை ஏமாற்றுவதன் மூலம் நண்பர்களுக்கு நன்மை என பதிவு செய்து இருந்தார்.